Wednesday, July 29, 2009

பாடல் 1. ப்ரியா

 

பல்லவி:

அன்பின் தெய்வமே ஆருயிர் இதயமே

தேடி வந்தோமே உம்மைத் தேடி வந்தோமே

அன்பு காட்டியே எங்களை வழி நடத்தினீரே

அன்புள்ள தேவன் அகிலத்தைத் தந்தீரே

 

சரணம்:

வானோர்களின் தேவன் வல்லமை இரட்சகர்

வழிகாட்டியவர் வசந்தத்தின் அற்புதர்

ஒளிமயமான வாழ்க்கை அர்ப்பணிக்கும் தெய்வம்

ஒலிவ மரமாய் என்றும் வசிக்கின்றார்

 

பாடல் 2. ப்ரவீன்:

 

நேற்று நாம் எல்லோரும் கூடினோமே

ஆண்டவரின் புகழைப் பாடினோமே

புதிய புதிய பாடல்களை இயற்றினோமே

அவை எல்லாம் அவர் புகழை எடுத்துச் சொல்லுதே

 

எங்களின் பாடல்களை உலகம் கேட்குமே

உலக மக்கள் மறுமலர்ச்சி அடைந்திடுவாரே

மாந்தர் எல்லாம் அவர் வழி நடந்திடுவாரே

பரத்தினிலே ஆண்டவரின் மனமும் குளிருமே

 

நாளை அவர் பிசாசிடம் கூறிடுவாரே

இவர்களே என் பிள்ளைகள் என்று சொல்லிடுவாரே

பிசாசுகள் நம்மைக் கண்டு பயந்து ஓடுமே

ஆண்டவரே தெய்வம் என்று உணர்ந்து கொள்ளுமே

 

 

 

 

 

பாடல் 3  கென்னடி

 

பல்லவி:

சின்ன சின்ன பாலகனாய் இயேசு பிறந்தார்

பாவிகளை மீட்டிடவே மனிதனாய் வந்தார்

 

சரணம்:

அவர் உன்னை நேசிக்கிறார் உன் உள்ளத்தைக் கேட்கிறார்

அவர் நம்மில் இருக்க நம்மையே கேட்கிறார்.

 

 

பாடல் 4: ஷெலினா

 

பல்லவி:

மனிதம் முழுதும் கடவுளின் சாயல்

மலர்கள் முழுதும் கடவுளின் கவிதை

ஒரு போதும் விலகாமல்

உடன் வந்து உன்னதம் சேர்க்கும் மனிதம்

 

சரணங்கள்:

 

நிறங்களாலே வேறுபாடா கடவுள் நல்ல ஓவியன்

மொழிகளிலே பேதமுண்டா கடவுள் நல்ல காவியன்

அனைத்தும் இணைத்து வணங்கிடும் நாயகன்

காயங்கள் எங்கிலும் கடவுளின் குருதியே

மனுக்குலம் இணைத்திடத் தவித்திடும் தலைவனே

 

உலகம் முழுவதும் அவர் படைப்பு

உயிர்கள் அனைத்திலும் அவர்

படைப்பாற்றல் விளங்கும்

உயிர் விடும் மூச்சு அவர் சுவாசக் காற்றே

ஜாதி மத பேதங்கள் மூச்சுக் காற்றில் இல்லையே

முழு உலகம் அவர் பெயரால் ஒரே அணியில்

கரம் இணைத்து நிதம் மகிழும்

 

பாடல் 5 சாம் ராஜ்

 

பல்லவி:

இயேசு சாமிக்கு இன்னிசை இசைத்திடுவேன்

ஆராதனையும் ஆனந்த கீதமும்

அன்றாடம் ஏறெடுத்து

அவர் பொற்பாதம் பணிந்திடுவேன்

சரணம்:

வழி தப்பிப் போகையிலே என்

வழித்துணையாய் அவரே

தடுமாறி விழும் போது என்

சுமை தாங்கி அவரே

இன்னல் வந்த போதும்

இருள் சூழ்ந்த போதும்

தூக்கியெடுத்து தாலாட்டு இசைக்கின்றார்

 

பாடல் 6. மறைதிரு. சசிகுமார்

 

பல்லவி:

உலகம் போற போக்குல என்ன நடக்குதோ தெரியல

ஒத்துமைய வாங்கப் போனேன் எங்கேயும் கிடைக்கல

உத்தமரே நீங்க வந்து கத்துக் கொஞ்சம் தாருமய்யா

ஒத்துமையா நாங்க சேந்து வாழ வழி கூறுமையா

 

சரணங்கள்:

 

சாதி மத பேதமெல்லாம் பாக்குறாங்களே மண்ண

சண்ட போட்டு நரகமாக ஆக்குறாங்களே

 

இயேசு சாமி காட்டிப் போன நல்ல வழி போகலியே

நம்ம சாமி படைச்ச மண்ணுல ஒத்தும வரலியே

மெ. தாமஸ் தங்கராஜ்

4/5பி, செயிண்ட் லூக்நகர், திருநெல்வேலி, 627 011.

அன்புடையீர்

திருச்சி நகரில் நிகழ்ந்த பட்டறையில் உங்கள் அனைவருடைய பங்கேற்பை நான் பெரிதும் பாராட்ட விரும்புகிறேன். நீங்கள் இயற்றிப் பாடிய பாடல்களைக் கேட்டு மிக மகிழ்ந்தேன்.  உங்களால் இயன்ற அளவு நீங்கள் அனைவரும் முயன்று பாடல்களை எழுதி இசை அமைத்திருக்கிறீர்கள்.  இன்னும் சிறந்த முறையில் நீங்கள் செயல்பட ஒரு சில ஆலோசனைகள்;

1.       பெரும்பாலான பாடல்கள் உங்கள் வாழ்வில் நீங்கள் அனுபவித்த நன்மைகள், கிருபைகள் பற்றி அமைந்துள்ளன. அது நல்லதுதான்.  ஆனால், இன்று நாம் நமது வாழ்க்கையில் சந்திக்கும் சவால்கள், நமது சமுதாயத்தில் மேலோங்கி நிற்கிற பிரச்சனைகள் போன்றவைப் பற்றிய பாடல்கள் மிகவும் தேவை.  நீங்கள் வெறும் கவிஞர் மட்டும் அல்லர்; ஒர் இறைவாக்குரைக்கும் தீர்க்கதரிசியும் கூட.  எனவே, அடுத்து பாடல் எழுதும் போது, உங்களைப்பற்றி மட்டும் சிந்திக்காமல் உங்களை சுற்றியுள்ள நடப்புகளைப் பற்றி எண்ணம் கொண்டு புதிய  பாடல்களை உருவாக்குங்கள்.

2.      தமிழ் மொழி நயம் பற்றிய அக்கறை உங்கள் பாடலகள் பலவற்றில் இல்லை. எதுகை, மோனை, சொல்வளம், கவிதைநயம், போன்றவற்றில் அதிக கவனம் நீங்கள் செலுத்தவில்லை.  கொடுக்கப்பட்ட நேரம் போதுமானதாக இல்ர்லாமல் இருந்திருக்கலாம்.  எந்த பாட்டு எழுதினாலும், இது அழகு தமிழ் தானா என்ற வினாவை எழுப்ப மறந்துவிடாதீர்கள்.

இந்த இரண்டு குறைகள் தான் நான் சுட்டிக்காட்ட விரும்பியவை.  மீண்டும் உங்களைப் பாராட்டுகிறேன்.  கடவுள் உங்கள் பாடல் எழுதி இசை அமைக்கும் திருப்பணியை ஆசீர்வதிப்பாராக

அன்புடன்,

மெ. தாமஸ் தங்கராஜ்.

ஜூலை, 23, 2009.

Tuesday, July 28, 2009

The Chief Guest and the Chief Faculty!

வாங்க.... வாங்க.... பாட்டுக்காரங்களா!

ஹலோ பாட்டுக்காரங்களே.

எழுதுங்க எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்க.

சி.எஸ்.ஐ - திருச்சி தஞ்சாவூர் டயோசிஸ் இன் வாலிபர் இயக்கம் நடத்திய
பாடல் எழுதுவோர் பயிற்சிப் பட்டறையின் தொடர்ச்சியாக இந்த வலைப்பூ பூத்திருக்கிறது.

இந்த வலைப்பூவில் அந்த பட்டறையில் பங்குபெற்றவர்கள் தவிர மற்ற பாடலாசிரியர்களும் கத்துக்குட்டிகளும் மாட்டிக் கொள்ளலாம். கத்தலாம். பாடலாம்.

உங்கள் கருத்துக்கள், அனுபவங்கள், பாடல்களை இதில் இணைத்துவிடுங்கள்.

உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகம் செய்யுங்கள்.